1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 7 நவம்பர் 2017 (18:53 IST)

ஆசிய குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் இறுதிப்போட்டிக்கு தகுதி

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், வியட்நாமில் நடைபெறும் ஆசிய மகளிர் குத்துச் சண்டை போட்டியின் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


 


இன்று நடைபெற்ற 48 கிலோ பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம், ஜப்பான் வீராங்கனை சுபாஸா கொமுரா என்பவருடன் மோதினார். ஜப்பான் வீராங்கனை ஆரம்பம் முதல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட போதிலும் அவருடைய தடுப்பை உடைத்து ஊடுருவி சில குத்துக்களை விட்டதால் இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த வெற்றி குறித்து மேரிகோம் கூறுகையில், 'பல ஆண்டுகளாக நாட்டுக்காக குத்துச்சண்டையில் ஈடுபட்டு வருகிறேன். இது மற்றவர்களும் சிறப்பாக ஆட ஊக்குவிக்கும், இந்தியக் குத்துச் சண்டை தலைவருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், அஜய் சிங்கின் ஆதரவு முக்கியம் அவர் ஆதரவில்லாவிட்டால் இது நிச்சய்ம் த்தியமாகியிருக்காது” என்று கூறினார்.

இறுதி போட்டியில் மேரிகோம், தென்கொரியாவின் கிம் ஹையங் மி என்பவருடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது