1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (19:16 IST)

5 முறை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வி.. 6வது சாம்பியன் ஆன இலங்கை..!

இதுவரை நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து முறை இறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோதி இலங்கை தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஆறாவது முறையாக இந்திய அணியுடன் மோதி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடந்த நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை அணி மிக அபாரமாக விளையாடி இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதற்கு முன்பு ஐந்து முறை இறுதிப் போட்டிக்கு சென்ற இலங்கை அணி 5 முறையும் இந்திய அணியுடன் தோல்வியை சந்தித்து கோப்பையை தவறவிட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு, 2005 ஆம் ஆண்டு, 2006 ஆம் ஆண்டு, 2008 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு என ஐந்து முறை இந்தியா இலங்கை அணிகள் தான் ஆசிய கோப்பை இறுதி போட்டிகளில் மோதியது.

ஆனால் ஐந்து முறையும் இந்தியா சாம்பியன் பட்டம் என்ற நிலையில் ஆறாவது முறையாக இன்று நடந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva