1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (21:37 IST)

ஆசிய கோப்பை யாருக்கு: பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

final
ஆசிய கோப்பை யாருக்கு: பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணி ஆரம்பத்தில் பேட்டிங்கில் திணறியது என்பதும் ஒரு கட்டத்தில் 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் ராஜபக்சே அதிரடியாக களத்தில் இறங்கி 45 பந்துகளில் 71 ரன்கள் அடித்தார் என்பதும் அவருக்கு டிசில்வா ஆதரவாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில் பாகிஸ்தான் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்றால் 20 ஓவர்களில் 171 ரன் எடுக்க வேண்டும்