புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 மே 2021 (16:56 IST)

ஆஷஸ் தொடரின் அட்டவணை வெளியீடு: டிசம்பர் 8ல் முதல் டெஸ்ட்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆஷஸ் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் நிலையில் 2021 மகத்தான ஆஷஸ் தொடர் அட்டவணையை தற்போது வெளிவந்துள்ளது 
 
முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி முடிகிறது. இந்த டெஸ்ட் போட்டி காபா நகரில் நடைபெறுகிறது 
 
இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 16 முதல் 20 வரை நடைபெறுகிறது 
 
3வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 முதல் 30 வரை மெல்போர்னில் நடைபெறுகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 5 முதல் 9 வரையிலும் 5வது டெஸ்ட் போட்டி ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதை அடுத்த இந்த டெஸ்ட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது