திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (15:28 IST)

நடப்பு சாம்பியன் இத்தாலியை வீழ்த்தி சாதனை! – Finalissima கோப்பையை வென்ற அர்ஜெண்டினா!

Argentina
யூரோ சாம்பியன் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது அர்ஜெண்டினா அணி.

உலக கால்பந்து அணிகள் இடையேயான யூரோ சாம்பியன் Finalissima கோப்பை போட்டி ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த போட்டியின் இறுதியில் நடப்பு சாம்பியனான இத்தாலி அணியும், லியோனல் மெஸ்சி பங்கேற்றுள்ள அர்ஜெண்டினா அணியும் மோதிக்கொண்டன.

விருவிருப்பாக நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணியின் மார்டினெஸ், ஏஞ்சல் டி மரியா, பாவ்லோ டைபாலா ஆகியோர் ஆளுக்கு ஒரு கோல் அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினர். அர்ஜெண்டினாவின் அதிரடி ஆட்டத்தை இத்தாலியால் சமாளிக்க முடியவில்லை. இதனால் ஒரு கோல் கூட அடிக்காமல் 0-3 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவிடம் தோல்வியை தழுவியது இத்தாலி.