திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2020 (16:40 IST)

பின்னாடி இறங்கி போரை வெல்ல முடியாது… தோனிக்கு அறிவுரை சொன்ன முன்னாள் வீரர்!

தோனியின் பேட்டிங் குறித்து முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடந்து வருகின்ற ஐபிஎல் தொடரில் தோனியின் பேட்டிங் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. மேலும் அவர் கடைசியாக இறங்குவதும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் அஜய் ஜடேஜா இதுகுறித்து பேசியுள்ளார்.

கிரிக்பஸ் இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில் ‘நான் திரும்பவும் சொல்கிறேன், தோனியின் இடம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. எந்த போரையும் பின்னால் இறங்கி வெல்ல முடியாது. ஒருவேளை உங்களிடம் வெல்லக்கூடிய வீரர்கள் இருந்தால் அது சாத்தியம். ஆனால் சிஎஸ்கேவில் இப்போது அப்படி யாருமில்லை என நினைக்கிறேன். போரில் வெற்றி பெற வேண்டுமென்றால் தலைவன் முன்னால் இறங்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.