1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 மார்ச் 2023 (08:17 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 45 வருடங்களுக்கு பிறகு இந்திய அணியின் மோசமான சாதனை..!

India -australia test
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டிகள் 47 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி மோசமான சாதனையை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களும் இரண்டாவது இன்னிசையில் 163 ரன்களும் எடுத்துள்ளது. 4 5 வருடங்களுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் இந்திய அணி 200 ரன்களுக்குள் ஆட்டம் இழந்தது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் 2  இன்னிங்ஸ்களில் முழுமையாக விளையாடி குறைவாக ஓவர்களில் ஆல் அவுட் ஆனதும் இந்த போட்டியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்கள் எடுத்து உள்ள நிலையில் இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva