2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு இங்கிலாந்து கொடுத்த இலக்கு எவ்வளவு?
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது
இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மொயின் அலி அணி 47 ரன்கள் எடுத்தார்.
இந்திய பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் சாஹல் 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி 247 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது