புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (17:54 IST)

ஜோகனஸ்பர்க் டெஸ்ட் : தென்னாப்பிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு!

ஜோகனஸ்பர்க் டெஸ்ட் : தென்னாப்பிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 
 
கடந்த 3ஆம் தேதி தொடங்கிய ஜோகன்ஸ்பர்க் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களும் தென்னாப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 266 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்சில் புஜாரே, ரஹானே ஆகியோர் அரைசதம் அடித்தனர் என்பதும் விஹாரி 40 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 240 ரன்கள் இலக்கு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த அணி தற்போது விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் இரண்டு நாள் மீதமிருக்கும் நிலையில் இந்த போட்டி வெற்றி தோல்வியில் தான் முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா இந்த போட்டியை வென்று தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்