வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:53 IST)

இந்த ஆண்டின் நம்பர் 1 பேட்ஸ்மேன்: தொடர்ந்து முதலிடத்தில் கோலி!

2019ம் ஆண்டிற்கான சிறந்த பேட்ஸ்மேன்களின் இறுதி பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

2020ம் ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் 2019ம் ஆண்டின் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் இறுதி பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 928 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி. இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும் உள்ளனர். விராட் கோலி தவிர்த்து முதல் 10 வீரர்கள் பட்டியலில் புஜாரா 5வது இடத்தில் உள்ளார்.

அதேபோல டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் 406 புள்ளிகளுடன் ரவீந்திர ஜடேஜா இரண்டாம் இடத்திலும், 308 புள்ளிகளுடன் அஸ்வின் 5வது இடத்திலும் உள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 360 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது குறிப்பிடத்தக்கது.