திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (21:15 IST)

டெல்லி அணிக்கு 172 இலக்கு கொடுத்த பெங்களூரு

டெல்லி அணிக்கு 172 இலக்கு கொடுத்த பெங்களூரு
இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகிறது என்பதும் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து பெங்களூர் அணி பேட்டிங் செய்து வந்தது என்பதை பார்ப்போம் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் பெங்களூரு அணியின் பேட்டிங் முடிவடைந்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார் என்றும் இதில் ஐந்து சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியின் சிராஜ், சாஹல்,ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் டெல்லி அணியை கட்டுப்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்