1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 மே 2018 (21:41 IST)

பஞ்சாப் அணிக்கு 153 ரன்கள் இலக்கு கொடுத்த ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய முதல் போட்டியில் மும்பை வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது போட்டியாக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன
 
இந்த போட்டியில் டாஸ்  வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு  செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது
 
பஞ்சாப் தரப்பில் முஜீப் ரஹ்மன் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த நிலையில் 153  ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது.
 
பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுமே தலா 10 புள்ளிகளில் இருப்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது