வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (08:59 IST)

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி… பாதுகாப்பை தாண்டி உள்ளே சென்ற சிறுவன்!

சென்னை சேப்பாக்கத்தில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளையின் போது சிறுவன் ஒருவன் பாதுகாப்பை தாண்டி மைதானத்தின் உள்ளே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுவன் நிகித் என்பவர் பாதுகாப்பைத் தாண்டி மைதானத்துக்குள் சென்றுள்ளார். வீரர்கள் அனைவரும் கொரோனா பயோ பபுளில் இருப்பதால் அவரை சந்திக்க மறுத்துள்ளனர். பின்னர் காவலர்கள் அந்த சிறுவனை அழைத்துச் சென்றனர். அவர் சில வருடங்களுக்கு முன்னர் அஸ்வினிடம் பயிற்சி பெற்றதாகவும் அவரை சந்திக்கவே மைதானத்துக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.