வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (11:17 IST)

விசேஷ பலன்களை கொடுக்கும் தை மாத கிருத்திகை வழிபாடு !!

கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட கார்த்திகேயன் என்பதால் கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருக்கக் கூடிய பக்தர்களுக்கு கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை மிகவும் விசேஷமானது. அதன் பிறகு ஆடி மாத கிருத்திகையும், தை மாத கிருத்திகையும் பக்தர்களால் விரதமிருந்து முருகனை பிரார்த்தனை செய்வது விசேஷ பலன்களை கொடுக்கும்.  

தை மாத கிருத்திகை நாள் முழுவதும் உபவாசமிருந்து முருகனை தரிசிப்பவர்களுக்கு மனதில் வேண்டிய வேண்டுதல் உடனே பலிக்கும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை பெண்களாக இருக்கும் ஆறு பெண்களுக்கும், கார்த்திகேயன் வரமாக கிடைத்ததால், கார்த்திகை விரதத்தில் ஆறு விதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது. கார்த்திகேயன் ஆறுமுகனாக விளங்குவதால் ஆறு விதமான பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

கோவில்களில் சண்முக அர்ச்சனை என்று முருக பெருமானுக்கு ஆறு விதமான அர்ச்சகர்கள் கொண்டு, ஆறு விதமான மந்திரங்கள் ஓதி, அபிஷேகங்கள் நடைபெறும். இதனை செய்பவர்களுக்கும், அதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கும் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறுவதாக ஐதீகம் உள்ளது.