ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (17:34 IST)

பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபடுவதால் என்ன பலன்கள்...?

pradosam
பிரதோஷங்கள் வாரத்தின் அனைத்து கிழமைகளிலும் வருகின்றன. வியாழக்கிழமை அன்று வரும் பிரதோஷத்தின் சிறப்பை பற்றி பார்ப்போம்.


மனிதனாக பிறந்து விட்ட அனைவரின் பிறவி தோஷங்களை போக்குவது தான் பிரதோஷம். மற்ற நாட்களிலும், நேரங்களிலும் சிவபெருமானை வழிபடுவதற்கும் இந்த “பிரதோஷ நேரம்” மற்றும் அது வரக் கூடிய கிழமைகளில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

இந்த பிரதோஷங்கள் எந்தெந்த கிழமைகளில் வருகிறதோ அந்த கிழமைக்குரிய நவகிரக நாயகர்களின் அருளும் அன்றைய தினத்தில் நமக்கு கிடைக்கிறது.

வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம் “வியாழப்பிரதோஷம்” என்று  அழைக்கப்படுகிறது. இன்று வரும் பிரதோஷத்தில் சிவ பெருமானை கோவிலுக்கு சென்று வணங்கு வதால் நவகிரகங்களில் முழு சுபகிரகமான “குரு பகவானின்” அருளை யும் சேர்த்து நமக்கு பெற்று தருகிறது.

வியாழன் பிரதோஷம் வருகிற போது  மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதி களில், மஞ்சள் நிற பூக்களை வைத்து, 27 வெள்ளை கொண்டைக் கடலைகளை நிவேதித்து வணங்க வேண்டும்.

பின்பு நந்தி பகவான் சிவபெருமான், அம்மன் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியவர்களை வணங்க பொருளாதார பிரச்சனைகள், திருமணத்தடை, புத்திரபேறு இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.