வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (14:46 IST)

சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதத்தின் பலன்கள் என்ன.....?

பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனை  தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.


நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

மாலை சிவன் கோவிலிற்கு சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி ஒருபிடி வன்னி இலை ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணி த்து, விளக் கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டா கும் சகல துன்பங்க ளும் விலகிப் போகும்.

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம்.

சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருட த்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்ச ணம் என்பர். சோம சூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ள ப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.