வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (04:30 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 11/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. துலாம்: 
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் கணவன், மனைவிக் கிடையே பிள்ளைகளின் செயல்பாடுகளால் சண்டை ஏற்படலாம். பயணங்கள் செல்ல நேரிடும்.  சில பிரச்சனை வரக்கூடும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
 
2. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாக கடினமாக போராட வேண்டி இருக்கும். காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். 
 
3. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான   நோய் ஏற்படலாம். தொழிலில் கடுமையாக போராடவேண்டி இருக்கும்.
 
4. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. 
 
5. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது  நல்லது. தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.