புதன், 18 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கெட்ட சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்க செய்யும் மந்திரம்!

அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள், சொல்ல வேண்டிய மந்திரம்.

மந்திரம்:
 
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ
பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா ||
 
இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும். உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு ‘ஹ்ராம்’ என்று எழுதி இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச் சுருட்டித் தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் அணிந்து  கொள்ள பூத, ப்ரேத, பிசாசு, துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.
 
தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு, கடை, தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத்  துணியில் முடிந்து வீடு, கடை, தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்.