1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (19:10 IST)

புது பானையில் பொங்கல் வைத்து தமிழர் தைத்திருநாள் வழிபாடு !!

தமிழர் தை திருநாளில் வீட்டின் நடு கூடத்திலோ, வெளியிலோ அழகான கோலமிட்டு புது அடுப்பு வைத்து புது மண்பானையை அலங்கரித்து கோலமிட்டு கழுத்தில் இஞ்சி கொத்து மஞ்சள் கொத்து கட்டி அடுப்பு மூட்டி புதுப்பானையில் புது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய் போட்டு சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள்.


பானையில் பொங்கல் பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாக குரல் எழுப்பி நம் வளர்ச்சிக்கு காரணமான இயற்கைக்கு படையல் போட்டு செங்கரும்பு வைத்து அலங்கரித்து நன்றி கூறி வழிபடுவார்கள்.

இந்த ஆண்டு நாளைய தினம் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை மற்றும் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலும் பொங்கல் வைக்கலாம். சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்: பொங்கல் திருநாள் 14:01:2022அன்று வெள்ளிக்கிழமை ம்தியம் 12:00- 1:30 மணி வரையிலும் மற்றும்  மாலை 4: 30 - 6:00 மணி வரையிலும்  பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.

மாட்டுப் பொங்கல் அன்று (சனிக்கிழமை) பூஜை செய்ய நல்ல நேரம்: தை 02 - 15:01:2022 சனிக்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையிலான நேரம் பொங்கல் வைக்க உகந்த  நேரமாகும். மேலும் 10:30 முதல் 12:00 மணி வரையாகும். இரண்டாம் நாள் கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து மாட்டு தொழுவத்தையும் அலங்கரித்து பொங்கல் வைக்கலாம்.

கனுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்: தை 03 - 16:01:2022 ஞாயிற்றுக்கிழமை 6:00 - 7:30 வரையிலும் மற்றும் 10:30 - 12:00 மணி வரையிலான நேரம் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.