வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கிருஷ்ண ஜெயந்தி அன்று செய்யவேண்டிய பூஜை முறைகள் !!

கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் 8:30 மணிக்குள் நடத்தலாம். கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்நாளில் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். 

பூஜை செய்யும் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை நினைத்து உண்ணா விரதமிருந்து, அவரது நாமங்களை சொல்லுவதும், கிருஷ்ணர் குறித்த பாடல்கள் பஜனையாகப் பாடுவதும், கிருஷ்ணர் அருளிய கீதை உபதேசத்தை பாராயணமும் செய்யலாம். 
 
அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும் . வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்க வேண்டும். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். 
 
மாலை நேரத்தில் கண்ணனின் படத்தை பூக்களால் அழங்கரித்து நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் என பலவகை பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும். 
 
வீட்டில் குழந்தைகளுக்கு கண்ணன் ராதை வேடம் போடவேண்டும். பக்கத்து வீட்டு சிறுவர் சிறுமிகளை பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூற வேண்டும். அனைத்து நலன்களுடன் குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.