1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஆசனங்கள் செய்யும்போது சொல்லவேண்டிய மந்திரங்கள்!

அதமுக்த சவாசனா: மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரண்டு கால்களையும், இரண்டு கைகளையும் நீண்ட வாக்கில் உறுதிப் படுத்திக்கொண்டு இடுப்பை உயரே தூக்கவும். தலை இரு கைகளுக்கிடையே சமமாக இருக்க வெண்டும். "ஓம் ஹரிம் மாரீச்சயே நமக" என்று மனதில் நினைக்கவும்.
அஸ்வ சஞ்சலானாசனா: மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடதுகாலை முன்பக்கமாக மடக்கி பாதம் நிலத்தில் இருகைகளுக்கிடையில் இருக்குமாறு வைக்கவும்.  வலது கால் பின்னால் நீண்டிருக்க வேண்டும். தலையை மேல்நோக்கி நிமிர்த்தவும். "ஓம் ஹரூம் ஆதித்யாய நமக" என்று மனதில் நினைக்கவும்.
 
பாத ஹஸ்தாசனா: மூச்சுக்காற்றை வெளியே விட்டவண்ணம் இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து கைகளின் பாதங்கள் இரண்டும் கால்களின் பாதங்களைத் தொடுமாறும் தலை முழங்காலைத் தொடுமாறும் வைக்கவும். "ஓம் ஹரய்ம் ஸவித்ரே நமக" என்று மனதில் நினைக்கவும்.
 
ஹஸ்த உத்தானாசனா: மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளை உயர மேலே தூக்கவும். மெதுவாக முதுகின் பின்பக்கமாக சாயவும், கைகளையும் தலையும் ஒரே கோட்டில் இருக்குமாறு வளையவும். "ஓம் ஹரௌம் அர்க்காய நமக" என்று மனதில் நினைக்கவும்.
 
பிரணமாசனா: கைகளையும் தலையையும் பழைய நிலைக்கு கொண்டுவந்து இரண்டு கால்களும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சூரியபகவான் உதிக்கும் திசையில் நிற்கவும். கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்குமாறு சேர்த்து இதயத்தின் முன்னால் இருக்கட்டும். "ஓம்  ஹரஹ பாஸ்கராய நமக" என்று மனதில் நினைக்கவும்.