புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சியாமளா நவராத்திரி வழிபாடு பற்றி தெரிந்து கொள்வோம் !!

சாக்த சமயம் என்பது அம்பிகையின் வடிவங்களை பிரதானமாகக்கொண்டு பூஜிப்பது. இதில் அன்னைக்கு நவராத்திரி என்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக நவராத்திரி என்றவுடன் சாரதா நவராத்திரி என்று சொல்லப்படுகின்ற புரட்டாசி மாதத்தில் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி உடன் கூடிய நவராத்திரி  மட்டுமே அனைவரின் நினைவுக்கும் வரும். அதுமட்டுமன்றி ஒரு ஆண்டுக்கு 4 நவராத்திரிகள் உள்ளன.
 
ஆஷாட நவராத்திரி - வராகி தேவி, சாரதா நவராத்திரி - துர்கா, லட்சுமி, சரஸ்வதி, சியாமளா நவராத்திரி - இராஜ மாதங்கி தேவி, வசந்த நவராத்திரி - லலிதா திரிபுரசுந்தரி ஆகியவையாகும்.
 
சியாமளா நவராத்திரி பூஜை தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். 
 
சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல்,  வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல்  கிட்டும்.  
 
நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை  சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது.