கரூர்: அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி

தமிழ் புத்தாண்டு தினத்தினையொட்டி, கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நால்வர் அரங்கில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்புத்தாண்டு தினம் இன்று துவங்கியதையடுத்து, கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நால்வர் அரங்கில் சிறப்பு தமிழ் இசை விழா நிகழ்ச்சி காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் ஆன்மீகம் கலந்த பக்தி இன்னிசை பாடல்களில் பங்கேற்றனர். இதில் தேவார தமிழ் பக்தி  இன்னிசை நிகழ்ச்சியில் கரூர் பரணி பார்க் பள்ளி குழுமங்களின் முதன்மை முதல்வர் டாக்டர் ராமசுப்பிரமணியனின் மகளான தமிழ்த்தென்றல்  வீ.ரா.ஸ்வேதா காயத்திரியின் தேவார பக்தி இன்னிசை நிகழ்ச்சி சுமார் 1.15 மணி நேரம் நடைபெற்றது. 
 
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி இன்னிசையையும், தேவார பக்தி இன்னிசைகளையும் கண்டு ரசித்தனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத் துறையினரும் சிறப்பாக செய்து இருந்தனர்.

 


இதில் மேலும் படிக்கவும் :