வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கரூர்: தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வர் ஆலயத்தில் சிறப்பு தரிசனம்

தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர். கரூர் அருள் மிக ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வர் ஆலயத்தில் திருவசாகம், அப்பர் சுந்தர் பாடிய தமிழ்பாடல்கள் பள்ளி மாணவிகள் பாடி தமிழ் வருடப் பிறப்பை வரவேற்றனர்.
 அருள் மிகு ஸ்ரீ விஷ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீபாரதனை காட்டப்பட்டது. அதே போல் கரூர் அருள் மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்திருந்தனர்.
 
பாடல் பெற்ற கொங்கு ஏழு ஸ்தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் அருள் மிகு ஸ்ரீ கல்யாணபசுதீஸ்வர் ஆலயத்தில் திறளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனிலையப்பரை தரிசனம் செய்தனர்.
தமிழ் வருடப் பிறப்பையொட்டி, அப்பர், சுந்தர் உள்ளிட்ட நால்வர்கள் எழுதிய தமிழ் பாடல்கள் மறைந்து வரும் நிலையில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆலய வளாகத்தில் தமிழ் பக்தி பாடல்களை பாடி தமிழ் வருடப்பிறப்பை  வரவேற்றனர்.
 
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்ப அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் குடியிப்பு பகுதியில் உள்ள ஆலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டனர்.