1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 ஜூலை 2024 (10:19 IST)

ஜூலை மாத ராசிபலன்கள் 2024! – மிதுனம்!

Monthly Astro Image
கிரகநிலை:
ராசியில் சூர்யன், சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராஹூ - லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:
07-07-2024 அன்று சுக்கிரன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-07-2024 அன்று செவ்வாய் லாப  ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-07-2024 அன்று சூரியன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இனிய சொற்கள் பேசும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே நடக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும்.

குடும்பத்தில் இளையசகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது.

உத்யோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம்.

தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே.

கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

பெண்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

திருவாதிரை:
இந்த மாதம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வலம் வரவும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16