புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சகலவிதமான தோஷங்களை போக்கக்கூடியதா வலம்புரி சங்கு?

வலம்புரி சங்குகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. வலம்புரி சங்கில் மூன்று வகைகள் உண்டு. அவை ஆண், பெண் மற்றும் மந்திரி சங்குகள் எனப்படும்.


ஆண்  சங்குகள் மட்டுமே ''ஓம்'' என்ற ஒலியை எழுப்புகிறது. இந்த சங்கு இருக்கும் இல்லம் மிகவும் அதிர்ஷ்டமானது. 
 
இந்த சங்குகள் தினசரி வெள்ளி தாளில் வைத்து பிறகு பூஜிக்கப்படுகிறது. இத்தகைய சங்குகள் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் இவைகளை தருகிறது. இத்தகைய வலம்புரி சங்குகள் நல்ல எதிர்காலத்தையும், செல்வத்தையும், சுகங்களையும் தருகிறது.
 
வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.
 
கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். அப்போது 108 சங்கு அபிஷேக பூஜைக்கு நடுவில் வலம்புரிச்சங்கு உருவத்தில் குபேரன் எழுந்தருளுவதாக ஐதீகம்.
 
கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.
 
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம்  கைகூடும்.