புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்கக் கூடாது தெரியுமா....?

பூஜை அறையில் நாம் வணங்கும் சாமி படங்களை வைத்து தான், நமது வாழ்க்கையின் தரமும் உயரும். எனவே பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும். எந்த உருவங்களை வைக்கக் கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அதை முறைப்படி   பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும்.
சனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில்  வைக்க கூடாது.
 
கோவணம் கட்டிய மொட்டைத் தலை தண்டாயுதபாணி படம். தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம்.
 
தனித்த காளியும், கால கண்டன் படமும் ஆகாது. சனீஸ்வர பகவானின் படம் இல்லங்களில் வைக்கக்கூடாது.
 
நவ கிரகங்களின் படமும் இல்லங்களில்  பூஜைக்கு உபயோகிக்க கூடாது. சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது.
 
ருத்ர தாண்டவமாடுவதும் கொடூர பார்வை உள்ளதும் கோபவேசமாக தவ நிலையிலுள்ளதும் ஆகாது. தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகை படங்கள் இல்லங்களில் பூஜைக்கு ஆகாது.