புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வருதினி ஏகாதசி விரதம் எவ்வாறு கடைப்பிடிப்பது...?

எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது.

வருதினி ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் பசும் தயிர் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.
 
பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். எனினும்  தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமித்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே  அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். 
 
ஏகாதசி விரத தினத்தன்று நீங்கள் மற்றும் உங்கள் வீட்டிலிருப்பவர்கள் போதை பொருட்கள் உபயோகித்தல், புலால் உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.
 
மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட துளசி இலைகள் மற்றும் தயிரை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு பிரசாதமாக  தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.
 
வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் மற்றும் மன நலம் சிறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியை  நிலை எப்போதும் இருக்கும்.