புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விளக்கேற்றிய பிறகு செய்யக்கூடாத செயல்கள் என்ன தெரியுமா...?

விளக்கு எரியத் தொடங்கியவுடன் அந்த தீபத்துக்குள் சூரிய தேவதை ஆவாஹனமாகி விடுவாள். விளக்கேற்றிய பிறகு சில விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

விளக்கையே தெய்வமாகக் கருதி வழிபடுவது தமிழா் பண்பாடு. எட்டு வகை மங்கலப் பொருள்களில் விளக்கும் ஒன்று.
 
திருமணமாகிப் புதுக் குடித்தனம் செய்ய போகும், பெண்ணுக்கு அளிக்கப்படும் சீர்வரிசைகளில் விளக்கு முக்கியமானது. திருமணத்தின்போது மணமக்கள்  குத்துவிளக்கை ஏற்றி வைத்து வலம் வருவது வழக்கம்.
 
திருவிளக்கில் லட்சுமி தேவியே விளங்குவதாக நம்பிக்கை! விளக்கை ஏற்றாமல் எந்தப் பூசையும், மங்கல காரியமும் தொடங்குவது இல்லை.
 
விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது. விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது. விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது. விளக்கேற்றிய  உடன் சாப்பிடக் கூடாது.
 
விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது. விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
 
விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது. விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது. வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை  ஏற்றவோ, தொடவோ கூடாது.