உடல் ஆரோக்கியத்தை காக்கும் தன்வந்திரி மந்திரம் !!

Sasikala|
உடல் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத்  தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். அதுவே வரமாகும்.

அதனால்தான், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் வாசகமும் சொல்லிவைக்கப்பட்டது. நோயில் இருந்து நம்மைக் காத்தருளும் கண்கண்ட தெய்வம்  தன்வந்திரி பகவான். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

மந்திரம்:
 
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய!!
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய!!!
ஸ்ரீமகாவிஷ்ணவே நம!!!!
 
நமக்கான நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியே பகவான் தன்வந்திரிதான். அவரை மனதார வழிபடுவோம். இந்த நாள் என்றில்லாமல், தினமும் காலையில்  இந்த மந்திரத்தை ஜபித்து வந்தால், உடலே தக்கையாகும். மனது சிறகாகும்.


இதில் மேலும் படிக்கவும் :