ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க வழிபாடு...!

முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் பல தொல்லைகளை அனுபவிக்கிறோம் அதில் ஒன்று தான் கடன் பிரச்சனை. இந்த கடன் பிரச்சனை விரைவில் தீர மூன்று பெளர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலிற்கு சென்று மனமுருகி குலதெய்வத்தை வேண்டி, முறையாக வழிபட்டு  வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.
ஒரு சிலருக்கு குலதெய்வ கோவில் வெகு தொலைவில் இருப்பதால் தொடர்ந்து மூன்று பெளர்ணமிகள் செல்ல இயலாத நிலை இருக்கும். அது போன்ற சமயங்களில் கீழே கூறப்பட்டுள்ள பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம்.
 
வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள் அதன் முன்பாக ஐந்துமுக விளக்கில் நெயிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவர் வழக்கம் படி குலதெயவத்திற்கு படையல் இட்டு வழிபட்டு, கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவேண்டும்.

இப்படி தொடர்ந்து ஒன்பது பெளர்ணமிகள் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டு வந்தால் உங்கள் கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குலதெய்வ படம் வீட்டில் இல்லாதவர்கள் குலதெய்வ கோவில் உள்ள திசை நோக்கி இந்த வழிபாட்டை செய்யலாம்.