வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கிய மக்காச்சோளம்...!!

சோளத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், துத்தநாகம், செம்புச் சத்து போன்ற பல வகையான உடலுக்கு அத்தியாவசிய தாதுக்கள்  நிறைந்திருக்கின்றன. 

மற்ற உணவு வகைகளில் இல்லாத வேதிப் பொருளான செலினியம் தாதுப்பொருளும் சோளத்தில் நிறைந்திருக்கிறது. சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 
 
இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிட்டு வருபவர்களின் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி  அதிகரித்து, இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்கும்.
 
சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இந்த சோளத்தில் இருக்கின்றன.
 
சோளத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது.
 
சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும்  தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. 
 
சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. எனினும் மூல நோயாளிகள் சோள உணவை  தவிர்ப்பது நலம்.