திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (20:02 IST)

சித்திரை மாத ராசிபலன்கள் 2023! – மிதுனம்!

Monthly Astro Image
புதன் அம்சத்தில் பிறந்த நீங்கள் தந்தையாரின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் எடுத்துக் கொண்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும்.விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணத்தால் அனுகூலம் உண்டு. பாதுகாப்பு அவசியம். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம் நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். பராக்கிரமம் வெளிப்படும். செயலில் வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறைகள் ஏற்பட்டு மறையும். எதிலும் உஷாராக இருப்பது நல்லது. பெரியோர்களின் ஆசிர்வாதங்களைப் பெற்று எந்த காரியத்தையும் செய்வது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம்.  கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள்.

கலைத்துறையினருக்கு வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். நீங்கள் முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.   கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் உங்கள் பணிகளில் தொய்வும், அதன்மூலம் மனதில் லேசான வருத்தமும் ஏற்படலாம். அதற்காக வருந்த வேண்டாம். அவையெல்லாமே தற்காலிகமாக தோன்றி பின் மறைந்து போகும். பெற்றோர்கள் நலத்தில் கவனம் தேவை. மக்கள் தொடர்புத் துறையில் இருக்கும் நபர்களுக்கு மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கவனம் தேவை.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை சாதகமாக செய்து முடிப்பீர்கள். திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பெரியோர் ஆலோசனை கை கொடுக்கும். உல்லாசங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையால் தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை

மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை  அதிகரிக்கும். கவனமாக  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வர காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும்.