வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை.

பிரம்ம முகூர்த்தத்தில் இறைவழிபாடு மேற்கொள்வது பலமடங்கு புன்ணியத்தை நமக்கு தேடித் தரும். இந்நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும். 
 
மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதை காட்டிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவது பல்வேறு பலன்களை அள்ளித் தரும். 
 
தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம், என எந்த ஒரு காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் நிச்சயம் வெற்றி பெரும்.
 
இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபடுவதால் கிரக தோஷம், ராகு, கேது தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷ பாதிப்பு உள்ளவர்களுக்கு பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்து வைத்தால் தோஷ நிவர்த்தி அடைந்து அவர்களின் வாழ்க்கையும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
 
பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், தேவதைகள், திருமால், சிவபெருமான், மாகலக்ஷ்மி போன்ற தெய்வங்கள் நமக்கு வான்வெளியில்  அருள்பாலிப்பதாக ஐய்தீகம். இந்நேரத்தில் தெய்வங்களின் பார்வை நம் மீது படும் பொழுது நம் துன்பங்கள் அனைத்தும் மறைந்து வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெரும்.
 
பிரம்ம முகூர்த்தத்தில் திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இந்த நேரம் எப்போதுமே சுபவேளை தான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்யத் தொடங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். 
 
பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சவுபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.