வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

எந்த நட்சத்திரக்காரர்கள் பைரவரை வணங்கினால் நல்ல பலன்களை பெறமுடியும்...?

அஷ்டமியில் மஹாவிஷ்ணுவின் கோகுலாஷ்டமி வழிபாடும் சிவபெருமானின் பைரவாஷ்டமியும் சக்தி வாய்ந்த வழிபாடாகும். பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். 

ஆகவே பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைரவரை வணங்கினால் ஆயூளுக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுகமாக வாழ வைப்பார்.
பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகள் கஷ்டம் எதிரிகளை அழிப்பதுதான். மேலும் சனிபகவானின் குரு பைரவர்.
 
பைரவரை வழிபட்டால் சனிபகவான் கெடுபலன்கள் குறையும். பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள்.
 
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். 
 
அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
 
அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், ஸ்வாதி, மிருகசீர்ஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும்.