திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 24 மே 2022 (17:04 IST)

அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகமும் பலன்களும் !!

Lord Shivan
சிவபெருமானை பொருத்தவரை அவருக்கு வெப்பம் என்பதே பிடிக்காது. சிவபெருமானின் உக்கிரம் தணிய வேண்டுமானால், பூமி குளிரவேண்டும். இதை கருத்தில் கொண்டும் அக்கினி நட்சத்திர நாட்களில் சிவபெருமானுக்கு தாரா அபிஷகம் செய்யப்படுகிறது.


அரைத்தெடுத்த சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.

அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோட்சம் மற்றும் தீர்க்காயுள் கிட்டும்.

திராட்சை ரசம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.

பேரிச்சம்பழம் ரசத்தினால் அபிஷேகம் செய்தால் எதிரிகள் இல்லாமல் போவர்.

நாவல்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கியம் கிட்டும்.

மாம்பழ ரசத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.

மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும்.

எலுமிச்ச பழ தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தால் ஆத்மஞானம் உண்டாகும்.

பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் மன தைரியம் பெறலாம்.

அக்கினி நட்சத்திர நாட்களில் உங்களுக்கு வசதியான ஒரு நாளில் சிவபெருமானுக்கு இந்த அபிஷேகங்களை செய்யலாம்.