Abimukatheesh|
Last Modified திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (18:50 IST)
ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைப்பெற்ற தடகள போட்டியில் எத்தியோப்பியாவை சேர்ந்த தடகள வீராங்கனை ஒற்றை ஷூவுடன் ஓடியுள்ளார்.
ரீயோ நகரில் நடைப்பெற்று ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைப்பெற்ற பொண்களுக்கான தடகள போட்டியில் 17 வீராங்கனைகள் கலந்துக் கொண்டு ஓடினர்.
அதில் இரண்டரை லேப்கள் மீதம் இருந்த நிலையில், ஓடுதளத்தில் தண்ணீர் இருந்த காரணத்தால் சக வீராங்கனை ஒருவர் கால் இடறி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவர் எத்தியோப்பியாவை சேர்ந்த எடினேஷ் டிரோவின் காலில் மோதினார். இதில் மற்றொரு வீராங்கனையும் கீழே விழுந்தார்.
கீழே விழுந்த இரண்டு வீராங்கனைகளும் எழுந்து ஓட தொடங்கினர். ஆனால் கீழே விழாத டிரோபவின் ஷூ பழுதடைந்தது. அதனால் சில நொடிகள் அதை சரி செய்ய முயற்சித்தார்.
பின்னர் எதுவும் யோசிக்காமல் பழுதடைந்த அந்த ஷூவை கழற்றி வீசி விட்டு ஒற்றை ஷூவோடு ஓடத் தொடங்கினார். அதை பார்த்த மொத்த அரங்கமும் அவரை உற்சாகப்படுத்தியது.
இதனால் அவர் 7வது இடத்தையே பிடித்தார்.
கீழே விழுந்து ஓடிய 3 பேருக்குமே இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்ள்ளது.