குபேர சம்பத்து கிடைக்க; சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம்!

சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார  சிக்கல்களால் தான். சொர்ண ஆகர்ஷண பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும்.
சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக  தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பாகும். ஐந்து புதன் கிழமைகளில் உங்கள் அருகில் இருக்கும் காலபைரவர் அல்லது ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர்,  சன்னிதானத்தில், இரண்டு நெய் தீபம் பைரவர் சந்நிதியில் ஏற்றி, குறைந்தது கால் கிலோ டைமண்ட் கல்கண்டு படைத்து பதினைந்து நிமிடமாவது உங்கள்  பிரார்த்தனைகளை மனதில் நிறுத்தி தியானம் செய்வது பலன் தரும்.
 
சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்குப் போக இயலாதவர்கள் பின்வரும் மந்திரங்களை தேய்பிறை அஷ்டமியன்று ஒரு மணிநேரம் வரை ஜபித்துவரவும்.
 
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் காயத்ரி:
 
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி: 
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
 
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மூல மந்திரம்:
 
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஆபதுத்தாரணாய
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் அஜாமளபந்ததாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய வித்வேஷனாய
மஹா பைரவாய நமஹ,ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்!


இதில் மேலும் படிக்கவும் :