சுவாமிமலை முருகன் மயில் வாகன உலா – குவியும் பக்தர்கள்
ஆடிக்கிருத்திகை நாளான இன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், வேண்டுதல்களும் நிறைவேற்றுவது வழக்கம். சுவாமிமலை முருகன் கோவிலில் இதனால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது.
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் இன்று பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முருகனை வழிபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதிலிருந்தும் சுவாமிமலைக்கு பக்தர்கள் கூட்டம் வந்தபடி இருக்கிறது.
இன்று அதிகாலை 5 மணிக்கே நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இன்று மாலை முருகன் மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு தெப்பத்திருவிழா நடைபெற இருக்கிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னேற்பாடுகளை செய்துள்ளது கோவில் நிர்வாகம்.