திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 18 ஜனவரி 2017 (11:55 IST)

மெரினா வெயிலில் போராடும் இளைஞர்கள்: ஹாயாக தியேட்டரில் படம் பார்த்த சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வம்!

மெரினா வெயிலில் போராடும் இளைஞர்கள்: ஹாயாக தியேட்டரில் படம் பார்த்த சசிகலா, முதல்வர் பன்னீர்செல்வம்!

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வெடித்துள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தன்னெழுச்சியால் தீயாக பற்றி எரிகிறது போராட்டக்களம். முடிவு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என வைராக்கியமாக இருக்கிறார்கள் இளைஞர்கள்.


 
 
அரசியல் தலைவர்கள் தங்கள் போராட்டத்திற்கு வந்தால் விரட்டும் இளைஞர்கள் முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் இதுவரை மாணவர்களின் போராட்டத்தை சென்று பார்த்து அவர்களின் கோரிக்கையை கேட்கவில்லை.
 
மெரினாவில் மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தி முதல்வர் இங்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று தியேட்டருக்கு சென்று ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்து மகிழ்ந்துள்ளார்.
 
மறைந்த முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நூறாவது பிறந்தநாளையொட்டி தமிழக அரசும், அதிமுகவும் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று மாலை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் திரையிடப்பட்டது.
 
இந்த திரைப்படத்தை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும், முதல்வர் பன்னீர்செல்வமும் சென்று பார்த்து மகிழ்ந்துள்ளனர். ஆனால் மெரினா கடற்கரையில் போராடும் இளைஞர்கள், முதல்வர் பன்னீர்செல்வம் போராட்டக்களத்துக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தும் முதல்வர் வரவில்லை.