செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (08:35 IST)

மாணவர்களை வைத்து ஏன் இதை செய்கிறீர்கள் – அதிகாரியை அறைந்த இளைஞர் கைது !

சேலத்தில் மாணவர்களை வைத்து டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட துணை ஆட்சியரை அறைந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள கூணான்டியூர் ஊராட்சியில் பள்ளி மாணவர்களை வைத்து துணை ஆட்சியர் சுசிலா ராணி டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது அங்கு வந்த பிரபாகர் எனும் இளைஞர் ’ அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை ஏன் மாணவர்கள் மீது திணிக்கிறீர்கள், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அதிகாரிகள் அரசின் அறிவுறுத்தலின் படியே விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுவதாக கூறியுள்ளார். இது சம்மந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் நிகழ அங்கு நடப்பவற்றை பிரபாகர் செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது அதிகாரி அவரது செல்போனைத் தட்டிவிட அது கீழே விழுந்து உடைந்துள்ளது. இதனால் கோபமான அந்த இளைஞர் பெண் அதிகாரியை அறைந்துள்ளார்.

இதனடிப்படையில் அதிகாரி சுசிலா ராணி அளித்த புகாரின் பேரில் பிரபாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.