செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 26 மே 2024 (15:38 IST)

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

Arpattam
நெய்வேலி அருகே மதுகுடித்து வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர் மர்மமாக உயிரிழந்த நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(35). புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தா. இவர் நள்ளிரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக நெய்வேலி வடக்குத்து போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் இவரது இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை ராஜ்குமார் வடக்குத்து காவல் நிலையம் எதிரே சாலையில் அடிபட்டு மர்மமான உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அதிகாலை முதல் பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் நெய்வேலி அருகே வடக்குத்து பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
Porattam
வாலிபரின் உயிரிழப்புக்கு போலீசார் தான் காரணம் எனக்கூறி உறவினர்கள் மற்றும்‌‌ பொதுமக்கள் ஆம்புலன்ஸில் உடலை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து பாதுகாப்பிற்காக அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.


காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்று 3 மணி நேரம் கழித்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து ராஜ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.