திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 4 மே 2020 (19:51 IST)

வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது..

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தனியில் யூடியூப் பார்த்து குக்கரில் சாராயம் காய்ச்சியுள்ளனர்.ல் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரியவே அவர்களைக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது.இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுபானக் கடைகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பலர் வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சி வருகின்றனர்.
திருவள்ளுவர் மாவட்டம் கன்னிகாபுரம் பகுதியில் சாராயம் காய்ச்சி வி்ற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக விரைந்து சென்ற போலீஸார், அங்கு வீட்டில் குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த இளைஞர்களை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.