திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (12:48 IST)

நான் அவன் இல்லை.. பேக் ஐடியில் பலே வேலை! – கம்பி எண்ணும் இளைஞர்!

பேஸ்புக்கில் அழகான ஆண்கள் புகைப்படங்களில் பேக் ஐடி வைத்து பெண்களை ஏமாற்றிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் போலீஸில் போலி ஐடி மூலம் தன்னிடம் ஒருவர் பணத்தை ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் குறித்த தகவல்களை வாங்கி விசாரணை மேற்கொண்ட போலீஸார் திருமுல்லைவாயிலை சேர்ந்த லோகேஷ் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வந்துள்ளன. பி.இ பட்டதாரியான லோகேஷ் வேலை கிடைக்காததால் பேஸ்புக்கில் அழகான இளைஞர்கள் புகைப்படத்தை வைத்து விமல், நிஷாந்த், விமலேஷ் போன்ற பெயர்களில் போலி ஐடிக்களை தயார் செய்து அதன் மூலம் பல பெண்களோடு பேசி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் அவர்களிடம் அவசர உதவி, மருத்துவ உதவி என பல்வேறு காரணங்களை சொல்லி பணம், நகைகளை வாங்கி ஏமாற்றியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.