1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (16:07 IST)

முத்தத்துக்கு ஆசப்பட்டு மொத்து மொத்துன்னு அடிவாங்கிய காதலன்

காதலியின் முத்தத்திற்காக பர்தா அணிந்து சென்ற வாலிபரை பொதுமக்கள் ரவுண்டுகட்டி அடித்து திவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் சக்திவேல். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். சக்திவேல் பெண் ஒருவரை காதலித்து வந்தார். சமீபத்தில் காதலியை சந்தித்த சக்திவேல், அவரிடம் ஒரு முத்தம் கேட்டுள்ளார். நான் சொல்வதை செய்து காட்டினால் உனக்கு முத்தம் தருகிறேன் என அவரது காதலி கூறியுள்ளார்.
 
ஆர்வக்கோளாறில் அந்த வாலிபர் நீ என்ன சொன்னாலும் செய்கிறேன் என சொல்ல, அந்த பெண் நீ பர்தா அணிந்துகொண்டு ராயப்பேட்டையில் இருந்து மெரினா வரை நடந்துவந்தால் உனக்கு முத்தம் தருகிறேன் என கூறினார்.
 
முத்த ஆசையில், சக்திவேல் பளபளன்னு பல்ல வெளக்கிட்டு, ஃபர்தா அணிந்துகொண்டு ராயப்பேட்டையில் இருந்து புறப்பட்டார். கடைசில மண்டைல இருந்த கொண்டய மறந்துட்டோமே காமெடி போல, பர்தா அணிந்த அவர், ஜெண்ட்ஸ் செருப்பை அணிந்து கொண்டு சென்றுள்ளார்.
 
இதனை கவனித்த மக்கள், திருடன் தான் மாறுவேடமிட்டு செல்கிறான் என நினைத்து, சக்திவேலை அடித்து துவைத்து போலீஸில் ஒப்படைத்தனர். சக்திவேல் நடந்தவற்றை போலீஸில் கூற அவர்கள், சக்திவேலை எச்சரித்து அனுப்பினர்.