1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஆகஸ்ட் 2024 (08:24 IST)

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு.. கோலாகல ஏற்பாடு!

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுவதை அடுத்து இந்த மாநாட்டிற்கு தமிழக அரசு கோலாகல ஏற்பாடு செய்துள்ளது.

அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டு நுழைவாயிலில் மழை வடிவிலான பிரம்மாண்டமான செட்டில் சிவன்,பார்வதி, முருகன் விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன!

மேலும் முகப்பில் ஆறுபடை வீடு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன!

இந்த மாநாட்டின் தொடக்கமாக இன்று காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் ஏற்றி வைக்கிறார்.

மேலும் அமைச்சர் பெரியசாமி  கண்காட்சியை தொடங்கி வைக்க, அமைச்சர் சக்கரபாணி முன்னிலை வகிக்கும் இந்த மாநாட்டில் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம்,  செந்தில்குமார் எம்.எல்.ஏ ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்மாநாட்டை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran