ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (07:49 IST)

தொடங்கியது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளையர்கள் உற்சாகம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெறும். நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேடு பகுதியிலும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்த நிலையில் இன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்குகிறது 
 
முதலில் ஜல்லிகட்டு காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் என கூறப்பட்டது. ஆனால் இன்றைய ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்ப இருப்பதால் காலை 7 மணிக்கு தொடங்கி உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க 900 காளையர்கள் ஈடுபட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஜல்லிக்கட்டு பல சுற்றுகளாக நடைபெற இருப்பதால் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படும் என்றும் ஒரு சுற்றுக்கு 75 காளையர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜல்லிக்கட்டு விழா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டினருக்கு என தனி கேலரி அமைக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த ஏற்பாட்டை தமிழ்நாடு சுற்றுலாத்துறை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது