1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (10:19 IST)

சென்னை செம்மஞ்சேரியில் உலகளாவிய விளையாட்டு நகரம்.. ஒப்பந்த புள்ளி வெளியீடு..!

சென்னை செம்மஞ்சேரியில் உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை செம்மஞ்சேரியில் உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான ஆலோசகர் நிறுவனம் பணியமர்த்த ஒப்பந்த புள்ளி வெளியாகி உள்ளது. மின்னணு மூலம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.
 
விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செம்மஞ்சேரியில் அமைக்கப்பட உள்ள உலகளாவிய விளையாட்டு நகரம், விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran