100 நாள் வேலை செய்த தொழிலாளர்களை காணவில்லை - கலெக்டரிடம் மனு !
திருப்பூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த ஊழியர்களைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள நஞ்சியம் பாளையம் என்ற பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், சுமார் 33 பேர் ராஜா என்பவரின் தோட்டத்தில் பணியாற்றியதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது.
ஆனால், அங்கு வேலை செய்தவர்களில் 24 பேர் மட்டுமே வேலை செய்துள்ளனர். மீதமுள்ள 9 பேரை அங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் அவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அந்த கிராம மக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.