சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (14:43 IST)

மாற்று திறனாளி சிறுவனை நடுரோட்டில் விட்டுவிட்டு மதுக்கடையில் குடித்த பெண்

ஈரோட்டில் பெண் ஒருவர் மாற்று திறனாளி சிறுவனை நடுரோட்டில் விட்டுவிட்டு மதுக்கடையில் சென்று மது அருந்தியுள்ளார்.


 

 
ஈரோடு நாடார்மேடு பகுதியில் நேற்று முன்தினம் பெண் ஒருவர் 10 வயதுள்ள மாற்று திறனாளி சிறுவனுடன் தள்ளாடியபடியே சென்றுள்ளார். செல்லும் வழியில் திடீரென்று அந்த சிறுவனை ரோட்டில் உட்கார வைத்து விட்டு அருகில் உள்ள மதுபான கடைக்கு சென்ற அவர் மது குடித்துள்ளார். பிறகு வெகு நேரமாகியும் அந்த பெண் திரும்பி வரவில்லை.
 
இதை பார்த்து கொண்டு இருந்த அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் சிறுவனின் நிலையை கண்டு ஈரோடு சைல்டு லைனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த மாற்று திறனாளி சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
 
இந்த நேரத்தில் அந்த சிறுவனை விட்டு சென்ற பெண் மது போதையில் தள்ளாடிபடியே திரும்பி வந்தார். அன்னல் சைல்டு லைன் நிர்வாகி மற்றும் ஆட்டோ டிரைவர்களும் அந்த சிறுவனை அந்த பெண்ணிடம் கொடுக்க மறுத்து விட்டனர்.
 
அதன்பின்னர் அந்த சிறுவன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து இந்த சிறுவன் எனது மகன் தான். அவன் பெயர் அய்யப்பன் எனவே அவனை என்னிடம் ஒப்படையுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு மருத்துவமனை ஊழியர்கள் மறுத்து விட்டனர்.
 
இந்த நிலையில் இன்று காலை அந்த பெண் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் வந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஷிப்டு மாறும் போது உள்ள பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் தெரியாமல் அந்த பெண், அந்த சிறுவனை தூக்கி கொண்டு ஓடி விட்டார்.